A funeral procession on the shoulders of friends; Akash's body buried with volleyball

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர்கிராமத்தைச் சேர்ந்தவர்வாலிபால் வீரர் ஆகாஷ். இவர் நேபாளநாட்டிற்கு வாலிபால் விளையாடுவதற்காகச் சென்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமைநேபாளத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றில் தமிழக அணி வெற்றி பெற்றது. இதன் பின் ஓய்வு அறைக்குச் சென்ற ஆகாஷிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக ஆகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத்தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆகாஷின் பெற்றோருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலை அறிந்த ஆகாஷின் பெற்றோர் இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஆகாஷின் உடலைத்தமிழகம் கொண்டு வருவதற்காகவும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேபாளத்திலிருந்து ஆகாஷின் உடலைத்தமிழகத்திற்குக் கொண்டு வர வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisment

இதன் பின் ஆகாஷின் உடல் இன்று காலை 7 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுதிருவள்ளூர் அடுத்த கைவண்டூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆகாஷின் உடலுக்கு அமைச்சர் நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 5 மணியளவில் வீரர் ஆகாஷ் உடலை, சக வாலிபால் வீரர்கள் சுமந்து சென்றுவாலிபாலுடன் நல்லடக்கம் செய்தனர். நண்பர்கள், உறவினர்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஆகாஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.