Advertisment

துப்புரவு தள்ளுவண்டியில் முதியவர் இறுதி ஊர்வலம்!

தேனியில் உள்ள வாரச்சந்தையில் இறந்த ஆதரவற்ற சிவனாண்டி என்பவர்உடல் துப்புரவு பணியாளர்களால் தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச்சென்று அடக்கம் செய்யப்பட்டது பெரும் ஆச்சர்யத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

funeral in Cleanup Trolley in theni

தேனியிலிருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் உள்ள கவுமாரியம்மன் கோயில் அருகில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்று இருந்து வந்த சிவனாண்டி கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு சந்தைவளாகத்திலே தூங்கி நாட்களை கடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் திடீரென உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இத்தகவலை அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். அப்படியிருந்தும் கூட போலீசார் மெத்தன போக்கை கடைபிடித்துக்கொண்டு மறுநாள் காலையில் போலீசார் வந்தனர். அப்படியிருந்தும் கூட இறந்த சிவனாண்டி உடலை ஆம்புலன்ஸ் மூலம் அடக்கம் செய்ய கொண்டு செல்லாமல் நகராட்சியின் துப்புரவு பணியாளர்களை வர சொல்லி தள்ளுவண்டியில் சிவனாண்டியின் உடலை தள்ளுவண்டியில் வைத்தனர். அப்பொழுது அங்கிருந்தோர் வெள்ளை வேட்டி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் தேனி மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி இருந்தும் கூட அதை ஏற்பாடு செய்யாமல் சிவனாண்டியின் உடலை தள்ளுவண்டியில் வைத்து பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அதை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் மூழ்கினார்கள்.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது... தெரியாத நபர் என்றால்தான் எங்கள் தரப்பில் முறையாக அனைத்தையும் செய்ய முடியும். அவர் அங்கு நன்கு அறிமுகமாகவர் என்பதால் வழக்குப் பதிவு செய்யாமல் உடல் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்தோம் என்றனர். நகராட்சி ஆணையாளர் ராஜாராம் கூறுகையில், இறந்தவரின் உடல் ஏற்றிசெல்லப்பட்ட தள்ளுவண்டி நகராட்சிக்கு சொந்தமானது இல்லை. போலீசார் செய்ய கூடியதை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் இருவர் செய்தனர். இச்சம்பவத்திற்கும் நகராட்சிக்கு தொடர்பு இல்லை என்றார். இருந்தாலும் இறந்தவரின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்று அடக்கம் செய்தது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது!

funeral Theni
இதையும் படியுங்கள்
Subscribe