Advertisment

‘நிதியினை உயர்த்தி வழங்க வேண்டும்’ - ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு தீர்மானம்! 

‘Funds should be raised’ - Panchayat Council President Federation Resolution!

ராஜாமுத்தையா அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பரங்கிப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் கூட்டமைப்பு சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பி.முட்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயசீலன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி மன்றக் கூட்டமைப்புத் தலைவர்கள் முத்துக்குமாரசாமி, சுதா மணிரத்தினம், செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் அப்பாரு ரவிக்குமார், அமைப்புச் செயலாளர் கே.ஆர்.ஜி. தமிழ்வாணன், வரகூர் ஊராட்சி மன்றத் தலைவர் பால.அறவாழி, நான் முனிசிபல் தலைவர் பத்மசுந்தரி உமாநாத், பெரியகுமுட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மரகதம், சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட குமராட்சி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்தக் கூட்டத்தில், ‘NREGS அனைத்து வேலைகளும் தலைவர்களே வேலை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது. ஊராட்சியில் பணி புரியும் ஊராட்சி செயலர் 3 வருடத்திற்கு மேல் ஒருவரை மாற்றி அமைக்க வேண்டும். கேவிவிடி வீடு வழங்கும் திட்டம் தலைவர்கள் அனுமதியுடன் நடைபெற வேண்டும். மாதம் ஒருமுறை அந்தந்த ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைவர்களை அழைத்துக் கூட்டம்கூட்டம் நடத்த வேண்டும். ஊராட்சிக்கு மாத மாதம் வழங்கும் SFC பொது கணக்கு நிதியினை உயர்த்தி வழங்க வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisment

Chidambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe