
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரத்தைச் சேர்ந்தவர் 55 வயதான சத்தியம். தலைமைக்காவலராகப் பணியாற்றி வந்தார். சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து சென்றபோது பைக் மோதி ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்காக பெரும் தொகை செலவானது. இதனால் அவரது குடும்பம் பெரும் பொருளாதார சிரமத்துக்கு ஆளானது. இதனை அறிந்த அவருடன் பணிபுரிந்த,1993 ஆம் ஆண்டு பேட்ச் பிரிவைச் சேர்ந்த, காவலர்கள் ஒன்றிணைந்து உதவ முடிவு செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 1993 ஆம் ஆண்டு பேட்ச் காவலர்கள் தங்களால் முடிந்த அளவு பணத்தைசேர்த்தனர்.முதல் கட்டமாக1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை திரட்டி அவரின் குடும்பத்தாரிடம் வழங்கினர். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1993 பேட்ச்போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் மொத்தம் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது. இதைத் திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில், சிகிச்சை பெற்றுவரும் சத்தியம் குடும்பத்தாரிடம்போலீசார் வழங்கினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)