Skip to main content

மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த கோயம்பேடு பேருந்து நிலையம்  (படங்கள்)

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் களைக்கட்டத் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் பொங்கல் தொடர் விடுமுறை காரணமாகச் சொந்த ஊருக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் வந்திருந்த நிலையில் அங்கு  மக்கள் கூட்டம்  அதிகமாகக் காணப்பட்டது. அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள், முன்பதிவு மையங்கள், மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்புகள் செய்யப்பட்டு இருந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்து முன்பு பாய்ந்த இளைஞர்; திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Youth lost their life at Trichy Central Bus Station
கோப்புப்படம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பொதுமக்கள் வெளியூருக்குச் செல்ல பரபரப்புடன் இருந்தனர். அப்பொழுது மத்திய பேருந்து நிலைய பகுதியில் ஒரு மஞ்சள் நிற சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் சாலையின் நடுவே இங்கும் அங்குமாக அலைந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக ஒரு தனியார் பஸ் வந்தது. பஸ் வாலிபரை கடக்க முயன்றபோது திடீரென்று அந்த வாலிபர் பஸ்சின் பின் சக்கரத்தில் பாய்ந்து தலையை விட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பஸ்சின் பின் சக்கரம் அந்த வாலிபரின் தலையில் ஏறி நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நேரில் பார்த்த பயணிகள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

முதலில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் இறந்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர். அப்பொழுது போலீசார் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்தனர். அந்த கேமராவில் மத்திய பேருந்து நிலைய பகுதியில் மஞ்சள் நிற சட்டை அணிந்து கொண்டு வாலிபர் நின்று கொண்டிருப்பதும் திடீரென்று தனியார் பஸ் அந்த வழியாக வரும் பொழுது பஸ்சின் பின் சக்கரத்தில் திடீரென்று பாய்ந்து தலையை விட்டு உடல் நசுங்கி இறந்ததும் தெரிய வந்தது.

இறந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், என்ன காரணத்துக்காக தற்கொலை முயற்சி செய்தார் என்ற முழு விவரம் தெரியவில்லை. பிறகு போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் பெயர் ரமேஷ் (வயது 42) திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புதூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் ஹோட்டல் வியாபாரம் செய்து வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் மனமுடைந்து பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதற்கு இடையில், அந்த வாலிபர் பஸ் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மதுரை பேருந்து நிலைய வணிக வளாகத்தில் தீ விபத்து!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Fire incident in Madurai bus station commercial complex

மதுரை பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் புதியதாக 3 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்த வணிக வளாகம் சுமார் 95 சதவித பணிகள் முடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. அதே சமயம் மீதமுள்ள 5 சதவிகித இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகத்தில் இன்று மாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் தீ விபத்தானது மின் கசிவு காரணமாக ஏற்படவில்லை எனவும், கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பயன்படுத்திய தீக்குச்சி மூலம் அங்கிருந்த குப்பைகளில் தீ பற்றி  விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.