Skip to main content

பொறியியல் கலந்தாய்வு; இட ஒதுக்கீடு குறித்த முழு விபரம்

Published on 10/09/2022 | Edited on 10/09/2022

 

Full details about Engineering Consultancy Reservations

 

தமிழகத்தில் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற நிலையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதற்கு முன் தேதிகள் வெளியிடப்பட்டு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாகவும் பொறியியல் கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டு கொண்டே வந்தது. இந்நிலையில் இன்று துவங்க இருக்கும் பொறியியல் கலந்தாய்வுக்கான விவரங்களையும் இடஒதுக்கீடு குறித்த தகவல்களையும்  உயர்கல்வித்துறை அமைச்சர் இதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டிருந்தார்.

 

அப்போது அவர் பேசியதாவது ''இந்த ஆண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்குபெற உள்ளது. தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் என 431 கல்லூரிகள் பங்குபெற உள்ளன. இதில் அரசு ஒதுக்கீடுகள் 1,48,711 இடங்கள் உள்ளது. தனியார் கல்லூரிகளில் 65 சதவிகிதம் அரசு கோட்டா. இதில் அரசுப்பள்ளி 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10,968 இடங்கள். இந்த ஆண்டுமுதல் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளில்  தொழிற்கல்வி (vocational) பாடப்பிரிவு வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு  2 சதவிகித இட ஒதுக்கீடாக 175 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது''

 

"பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு 10ம் தேதி(இன்று) துவங்க இருக்கிறது. 10 ம் தேதி தொடங்கப்பட்டு நவம்பர் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும். நான்கு கட்டமாக பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. செப்டம்பர் மாதம் 10ம் தேதி முதல் 12ம் தேதி  வரை முதல்கட்டம் நடைபெறும். இரண்டாவது கட்டம் செப்டம்பர்  25 ம் தேதி  தொடங்கி 27 ம் தேதி வரை நடைபெறும். முதல் கட்டத்திற்கும்  இரண்டாம் கட்டத்திற்கும்  இடையில் உள்ள காலம் மாணவர்களின் நலன் கருதிக் கொடுக்கப்பட்டுள்ளது.  

 

மூன்றாவது கட்டம் அக்டோபர்  13 ல் தொடங்கி 15 வரை நடைபெறும்.  நான்காவது கட்டம் அக்டோபர் 29 முதல் 31 வரை நடைபெறும். நான்கு கட்டங்களில் நடைபெறும் இந்த கலந்தாய்வுகளில் பொதுப்பிரிவு 31%. இந்த பொதுப்பிரிவில் உள் ஒதுக்கீடாக அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கப்படும். பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு கொடுக்கப்படும் 30% ல் உள் ஒதுக்கீடாக 3.5% இஸ்லாமியர்களுக்கு என்று ஒதுக்கப்படும். அதிலும் 7.5% உள் ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் 7.5% உள் ஒதுக்கீடு.

 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். 18% பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் அதிலும்  3% உள் ஒதுக்கீடு அருந்ததியர் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 1% இடஒதுக்கீடு பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும். அதிலும் உள் ஒதுக்கீடாக 7.5% அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5%  ஒதுக்கீடு கொடுக்கப்படும். துணைநிலை கலந்தாய்வு நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெறும். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து இரண்டாம் முறை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதில் வாய்ப்பு கொடுக்கப்படும். செப்டம்பர் மாத இறுதியில் வகுப்புகள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். பாடத்திட்டத்தை பொறுத்தவரை பொறியியல் பிரிவிலும் தமிழ் மொழிப்பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'ஆளுநருக்கு என் மீது பாசம் அதிகம்'-அமைச்சர் பொன்முடி பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
 'Governor has a lot of affection for me' - Minister Ponmudi's speech

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு ஆளுநர் அவருக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் விழுப்புரம் கூட்டத்தில் பொன்முடி பேசுகையில், 'ஆளுநருக்கு என் மேல் ரொம்ப பிடிப்பு, பாசம் அதிகம். ஏனென்றால் என்னுடைய நண்பர்கள் எல்லாம் சொன்னதைப்போல நான் கொஞ்சம் சமத்துவக் கொள்கை, சமதர்மக் கொள்கை இதெல்லாம் கொஞ்சம் பேசுற ஆளு. மத்த அமைச்சர்களை விட நான் தான் அவரிடம் நேரடியாக எல்லாவற்றிலும் தொடர்புடையவன். அதனால் என் மேல அவருக்கு பாசம், பற்று, பிரியம் எல்லாம் இருந்தது. உச்சநீதிமன்றத்தை தீர்ப்பு வந்ததற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராக என்னை டிசம்பர் 19ஆம் தேதியிலிருந்து சபாநாயகர் அறிவித்துவிட்டார். அதற்கு பிறகு மார்ச் மாதத்தில் உத்தரவு எல்லாம் வந்த பிறகு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை அவர் உடனடியாக பார்த்து நான் அமைச்சராக பொறுப்பேற்கிறேன் என்று சொல்லி இருந்தால் சரி. அதைதான் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செய்ய வேண்டும்.

உண்மையான நிர்வாகத்தை நடத்துபவர் முதல்வர். ஆளுநர் பெயருக்கு நிர்வாகத்தை நடத்துபவர். கவர்னர் என்ன ஓட்டு போட்டா வந்தார். ஒரு நியமனம் செய்யப்பட்ட ஒருவர் மாநில அரசாங்கம் எதை சொல்லுகிறதோ அதை செய்ய வேண்டியதுதான் அவருடைய பொறுப்பு. அதுதான் அரசியலமைப்பு சட்டம் சொல்லுவது. இன்றுகூட கேரளாவில் ஏழு அரசியலமைப்பு சட்டங்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் இருக்கிறார் என்று சொல்லி கேரளாவினுடைய முதல்வர் உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார் என்று சொன்னால் இந்த ஆளுநர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் ஆட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்ற இந்த ஒன்றிய அரசை நீங்கள் தூக்கி எறிய வேண்டுமா வேண்டாமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.