admk

Advertisment

திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம் அறிவித்திருந்த நிலையில் திருச்சியில் பல இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. திருச்சி அரியமங்கலம் பகுதி, திருவெறும்பூர், காட்டூர், சக்தி நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில் கூடிய அதிமுகவினர் ''பொய்யான வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்த விடியாத அரசான திமுக அரசின் மெத்தனப் போக்கை கண்டிக்கிறோம்'' என கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபாணி மற்றும் வட்ட செயலாளர்கள் கணேசன், விஸ்வநாதன், ரவிசங்கர், தெய்வ மணிகண்டன், சங்கர், சிந்தாமணி கூட்டுறவுச் சங்கத் தலைவர் சகாதேவ்பாண்டியன், வழக்கறிஞர் சின்னதுரை மற்றும் முன்னோடிகள் மோகனசுந்தரம், கோவிந்தராஜ், மீசை ஆறுமுகம், நவநீதன், துரை, ராம் வெங்கடேஷ், சுவீட் வெங்கடேசன், அதிமுக ஐடி விங் சுரேஷ்குமார், கோபிநாத், பிரசன்னகுமார், ரமேஷ்குமார், வினோத், மனோ ஆகியோர் கலந்து கொண்டனர்.