மயிலாடுதுறையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன் சக்கரம்திடீரென கழண்டு ஓடியதால் பேருந்து குடை சாய்ந்து நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது வடரங்கம் கிராமம். இந்தக் கிராமத்திற்கு A8 என்ற எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இன்று சீர்காழியில் இருந்து வடரங்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன் பக்கத்தில் உள்ள வலதுபுற சக்கரம் திடீரென கழண்டு ஓடியது. இதனால் பேருந்து சாலையின் ஓரத்திலேயே குடை சாய்ந்து நின்றது. இருப்பினும் இந்தச் சம்பவத்தில் பயணிகள் ஓட்டுநர் என யாருக்கும் எந்த ஒரு சேதமும் ஏற்படாமல் அனைவரும் பத்திரமாகதப்பித்தனர். பேருந்து மிகவும் மோசமாக இருப்பதால் அதனைச் சீரமைப்பு செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது வடரங்கம் செல்லும் அந்தப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழண்டோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.