Advertisment

சொகுசுப் பேருந்தின் முன் டயர் வெடித்து விபத்து; டோல்கேட் நாசம்

Front tire burst accident of luxury bus; Tollgate destroyed

Advertisment

சேலம் அருகே தனியார் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில் இரவு வேளையில் தாறுமாறாக ஓடிய பேருந்து டோல்கேட் பகுதியில் நிறுத்தபட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் சொகுசு பேருந்து ஒன்று இரவில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின்முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து குமாரபாளையம் சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. பின்னர் தாறுமாறாக பேருந்து இடிபாடுகளில் சிக்கி நின்றது. இதில் பேருந்தின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. இந்த விபத்தில்பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

kumarapalayam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe