The frog in the bottle ... Shock lovers!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே இருக்கும் சித்தரேவு கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடையில் நெல்லூரைச் சேர்ந்த பாண்டி என்பவர் மதுபாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார்.

Advertisment

அவர் வாங்கிய குவாட்டரில் கருப்பு நிறத்தில் குட்டித்தவளை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் பாட்டிலின் மூடி உடைக்கப்படாத நிலையில், உள்ளே தவளை குட்டி எனும் தலைப்பிரட்டைக் கிடப்பது குறித்து டாஸ்மாக் ஊழியர்களிடம் குடிமகன் கேட்டுள்ளார்.

Advertisment

அவர்களோ நல்லதுதானே சைடிஸ்க்கு எடுத்து வச்சுக்கோங்க என்று அசால்டாக கூறியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த பாண்டி தனக்கு நியாயம் கிடைக்கும் வரை, அந்த பாட்டிலை உடைத்து குடிக்கப் போவதில்லை என சபதம் எடுத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதுகுறித்து குடிப்பிரியர் பாண்டி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது கண்டு மற்ற குடிப்பிரியர்கள்ஆண்களும் அதிர்ச்சியில் உள்ளனர்