ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்ததாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.தெற்குப் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் என்பவர் வாங்கிச் சென்ற ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்ததாக புகார் எழுந்த நிலையில், பால் பாக்கெட்டில் தவளை இருந்தது உண்மையா என ஆவின் விற்பனைப் பிரிவு மண்டல மேலாளர் ஐங்கரன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்ததாக வெளியான தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.