/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/burni.jpg)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டு உடல் புதைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசாருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இளைஞரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், சோழவரம் அய்யாநல்லூர் பகுதியைச் சேர்ந்தகோகுல் (24) என்பது தெரியவந்தது.
மேலும், கோகுல் அந்தப் பகுதியில் உள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், கடந்த 12ஆம் தேதி இரவு நேரத்தில் வழக்கம் போல்வேலைக்குச் சென்றவர் கடைக்கு வரவில்லை. இது குறித்து அவரது வீட்டிற்கு கடை உரிமையாளர் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கோகுலின் நண்பர்கள் இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், நகைக்காக கோகுலை எரித்துக் கொலை செய்து புதைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)