திருமணம் என்பது அனைவருக்கும் மறக்க முடியாத ஒன்று. அதிலும் ஒவ்வொருவருடைய திருமணத்திலும் அவர்களின் நண்பர்கள் செய்யும் அலப்பறைகள் சொல்லி மாளாது. அதுவும் பரிசு பொருட்கள் கொடுக்கும் போது அவர்களின் சேட்டைகள் எல்லை மீறும். அந்த மாதிரியான ஒரு வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisment

அந்த வகையில், இளைஞர் ஒருவரின் திருமணத்துக்கு சென்ற அவரின் நண்பர்கள், அவருக்கு பரிசு ஒன்றினை வழங்கி உள்ளார்கள். அவரும் அதை ஆவலுடன் பிரித்து பார்க்க அதில் நடிகர் வடிவேல் கால்சட்டையில் கையை விட்டுக்கு கொண்டு நிற்கும் புகைப்படம் இருந்துள்ளது. இந்த புகைப்படத்தை கண்ட அனைவரும் வாய்விட்டு சிரித்தனர். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.