Advertisment

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை பயன்படுத்த சட்டபூர்வ அனுமதி உள்ளதா? -காவல்துறை விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

friends of police

தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ள, ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்த சட்டபூர்வ அனுமதி உள்ளதாஎன விளக்கமளிக்க, தமிழக உள்துறைசெயலாளருக்கும், டிஜிபி-க்கும், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனை காவல்துறையினர் அடித்து கொன்ற சம்பவம் தொடர்பாக, மனித உரிமை ஆணையம் ஏற்கனவே தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

Advertisment

இந்நிலையில்,இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி,தூத்துக்குடியைச் சேர்ந்த மக்கள் மேம்பாட்டு கழக அமைப்பாளர் அதிசய குமார் என்பவர், காவல் நிலையங்களில் உள்ள ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினர்,மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதால்அந்த அமைப்பை நிரந்தரமாகதடை செய்ய வேண்டும் எனக்கோரி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரனுக்கு புகார் மனு அனுப்பினார்.

இந்த புகார் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மனித உரிமை ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரன், தமிழக காவல் துறையின் அதிகாரபூர்வ பணிகளை மேற்கொள்ள ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்த சட்டபூர்வ அனுமதி உள்ளதா?

காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ள ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா?

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை நிரந்தரமாகத் தடை செய்யக் கோருவதில் நியாயம் உள்ளதா? என்பது குறித்து, நான்கு வாரங்களில் விளக்கமளிக்க, தமிழக உள்துறைசெயலாளர் மற்றும் டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளார்.

state human rights commission Permit friends of police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe