Skip to main content

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை பயன்படுத்த சட்டபூர்வ அனுமதி உள்ளதா? -காவல்துறை விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020
friends of police

 

தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ள, ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்த சட்டபூர்வ அனுமதி உள்ளதா என விளக்கமளிக்க,  தமிழக உள்துறை செயலாளருக்கும், டிஜிபி-க்கும்,  தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில்  தந்தை, மகனை காவல்துறையினர் அடித்து கொன்ற சம்பவம் தொடர்பாக,  மனித உரிமை ஆணையம் ஏற்கனவே தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி, தூத்துக்குடியைச் சேர்ந்த மக்கள் மேம்பாட்டு கழக அமைப்பாளர் அதிசய குமார் என்பவர், காவல் நிலையங்களில் உள்ள ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினர், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதால் அந்த அமைப்பை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் எனக்கோரி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரனுக்கு புகார் மனு அனுப்பினார்.

இந்த புகார் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மனித உரிமை ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரன், தமிழக காவல் துறையின் அதிகாரபூர்வ பணிகளை மேற்கொள்ள ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்த சட்டபூர்வ அனுமதி உள்ளதா?

காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ள ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா?

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை நிரந்தரமாகத் தடை செய்யக் கோருவதில் நியாயம் உள்ளதா? என்பது குறித்து, நான்கு வாரங்களில் விளக்கமளிக்க,  தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீதியரசர்களுக்கு முன் சில கோரிக்கைகளை வைக்கிறேன்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

"I will also put forward some of my demands in this program in which judges will participate" - Chief Minister M.K.Stalin

 

மாநில மனித உரிமைகள் ஆணைய வெள்ளி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 

 

சென்னை கலைவாணர் அரங்கத்தில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மேலும் இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல், தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் அருண் மிஷ்ரா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 

 

இந்த விழாவில், மனித உரிமை மீறல் புகார்களைச் சிறப்பாக கையாண்ட ஆட்சியர்கள், எஸ்.பி.களுக்கு முதலமைச்சர் விருது வழங்கினார். இதில், திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமர் மாவட்ட ஆட்சியர்களுக்கும், மதுரை காவல் ஆணையருக்கும், கோவை எஸ்.பி.க்கும் விருது வழங்கப்பட்டது. 

 

இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் 1997ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர்தான் மனித உரிமை ஆணையத்தை அமைத்தார். மனித உரிமை மாண்புகள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். மனித உரிமைகளைக் காக்கும் பொறுப்பில் இருந்து ஒருநாளும் தவற மாட்டோம். 

 

மாநில மனித உரிமை ஆணையத்தின் இந்த வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். அதன்படி, ஆணையத்தில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். முன்னதாக பேசிய உறுப்பினர், ஆணையத்தின் விசாரணை குழுவில் காவல்துறையின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று சொன்னார். இதுகுறித்தும் விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும். மனித உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்களுக்காக தொடர்ந்து போராடுபவர்களை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பது குறித்தும் ஆராயப்படும். மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். 

 

எந்த ஒரு தனிமனிதனின் உரிமையும் மீறப்படக்கூடாது. எத்தகைய சமூகமும் எதன் பொருட்டும் இழிவுப்படுத்தக் கூடாது. இதற்கு காரணமான யாரும் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பிவிடக்கூடாது இவை மூன்றும் இந்த அரசின் மனித உரிமை கொள்கை என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் அறிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன். 

 

உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் எனது சில கோரிக்கைகளையும் முன் வைக்கிறேன். பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தமிழ் மொழி, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். 

 

 

Next Story

சிறை கைதி உயிரிழந்த சம்பவம்- அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

 

prison incident state human rights commission order


நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் முத்து மனோ உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

பாளையங்கோட்டையில் சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த ஏப்ரல் 22- ஆம் தேதி முத்து மனோ என்ற சிறைக் கைதி உயிரிழந்தார்.

 

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் சம்பவப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி முத்து மனோவின் உறவினர்கள் தொடர்ந்து அவரின் உடலை வாங்காமல் 70 நாட்களாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் இது தொடர்பாக வெளியாக செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து சிறைத்துறை தலைமை இயக்குனரிடம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தது.

 

இன்று (30/06/2021) இந்த வழக்கினை விசாரித்த மனித உரிமை ஆணையம் சிறைத்துறை தலைமை இயக்குனர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவு முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.