Advertisment

கூட்டாக மது அருந்திவிட்டு தலைக்கேறிய போதையில் இளைஞனை கிணற்றில் தள்ளிய நண்பர்கள்!!

வேலூர் வாணியம்பாடியில் கூட்டாக மது அருந்திவிட்டுபோதையில் நண்பனை சக நண்பர்கள்கிணற்றில் தள்ளி அந்த நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

drink

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சாமந்திகுப்பத்தைச் சேர்ந்தவர் இளைஞர் மவீன். வெளியூரில் தச்சு வேலை பார்க்கும் மவீன் விடுமுறைக்காக சாமந்திகுப்பம் வந்துள்ளார். அப்போதுஅவரது நண்பர்கள், சுதர்சன், பவீத், ராகுல், கல்யாண குமார், அருண் குமார், அஜித் குமார் ஆகியோருடன் காட்டுப்பகுதிக்கு சென்று கூட்டாக மது அருந்தியுள்ளார் மவீன். மது குடித்துவிட்டு அனைவரும் தலைக்கேறிய போதையில்வீடு திரும்பிய நிலையில் மவீன் மட்டும் வீடு திரும்பவில்லை. அதற்கு அடுத்தநாள் அவர்கள் மது அருந்திய இடத்திற்கு அருகிலுள்ள கிணற்றில் சடலம் ஒன்று மிதக்க இறுதியில்அது மவீன் என்று தெரியவந்தது.

Advertisment

drink

drink

மேலும் அதைத்தொடர்ந்து மொபைல் போனில் ஒரு வீடியோ காட்சி ஒன்றும் கிடைத்தது, அதில்கூட்டாக மது அருந்தியசக நண்பர்கள் மிகுந்த போதையில் மவீனை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுஅருகிலுள்ள கிணற்றில் தள்ளும் காட்சி பதிவாகியிருந்தது. கிணற்றில் தள்ளப்படும் பொழுது மவீனும் தலைக்கேறிய போதையில் இருந்துள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட நபர்கள்அனைவரும் தலைமறிவாகியிருந்தது தெரியவந்தது. ஆனால் அந்த நண்பர்கள் குழுவில் இருந்த அருண்குமார் என்பவரை மட்டும்பிடித்த வாணியம்பாடி போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் விளையாட்டிற்குதான் அப்படி செய்தோம் வேண்டுமென்றுகிணற்றில் தள்ளவில்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக மற்ற 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

drinks murder wine
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe