Advertisment

கடனை திரும்ப தராத நண்பன்; கொலை செய்து வீசிய கொடூரம்

 A friend who does not repay a loan; The brutality

Advertisment

வாங்கிய கடனை திரும்பத் தராததால் நண்பனையே கொடூரமாக கொலை செய்து வீசிய சம்பவம் காஞ்சிபுரம் உத்திரமேரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ரயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் ரமேஷ். இவர் தன்னுடைய நண்பர் கார்த்திக் என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கார்த்திக் தன்னிடம் வாங்கிய கடன் தொகையை கொடுக்குமாறு ரமேஷிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் ரமேஷ் தரப்பு பணத்தை தராமல் அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் அவருடைய நண்பர்கள் சிவா, ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று பேருடன் சேர்ந்து வீட்டில் வைத்து கடுமையாக தாக்கியதோடு கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பின்னர் ஏரிக்கரையை ஒட்டிய சாலை ஓரத்தில் வீசி சென்றுள்ளனர்.இந்த சம்பவத்தில் மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார் ஸ்ரீகாந்த் என்ற நபரை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடன் தொகையைதிரும்ப தராததால் நண்பனையே கொலை செய்து வீசிய சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

incident kanjipuram police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe