/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/299_7.jpg)
விழுப்புரம் மாவட்டம்செஞ்சியைச் சேர்ந்த இளைஞர் சீனிவாசன். 20 வயதான இவர் தனியார்கல்லூரியில்டிப்ளமோஇரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் இவரது நண்பர். 20 வயதான இவர் அருகில் உள்ள கொரியர்சர்வீஸ்ஒன்றில்வேலை செய்து வந்துள்ளார். ஓரிரு தினம் முன்பு நண்பர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் விழுப்புரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்ததில் பின்னால் அமர்ந்து வந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிச் சென்ற பிரபு படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நண்பனின் இறப்பின்துக்கம் தாளாது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றபிரபுவைக்காப்பாற்றி மேல்சிகிச்சைக்காகப்புதுச்சேரிஜிப்மர்மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரபு நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பின் நண்பனின் இறப்பிற்குத்தன்னை காரணமாகக் கருதி வீட்டின் அருகிலிருந்த மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பிரபுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பனின் இறப்பினை தாளாமல் தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செயல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us