Advertisment

அடிக்கடி மிரட்டல் விடுத்த ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Frequent threatening teacher passed away

Advertisment

விழுப்புரம் நகர பகுதியை ஒட்டி உள்ளது சாலாமேடு. இந்தப் பகுதியை சேர்ந்தவர்கள்சங்கர நாதன் (36) - சங்கீதா தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி சுமார் எட்டு வருடம் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சங்கரநாதன் விழுப்புரம் அருகிலுள்ள பேரங்கியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் விஷ மருந்து குடித்து இறந்து விடுவேன் என்று அடிக்கடி கூறி மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் போதையின் காரணமாக உண்மையிலேயே விஷ மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். உறவினர்கள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ஆசிரியர் சங்க ரங்கநாதன் உயிரிழந்துள்ளார். இவர் ஏற்கனவே இதே போல் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்து காப்பாற்றப்பட்டவர் என்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸார் ரங்கநாதன் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் ஆசிரியராக பணி செய்த ஒருவர் அடிக்கடி போதையில் தற்கொலை மிரட்டல் விடுத்தவர் உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Suicide teacher villupuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe