Advertisment

அடிக்கடி மின்வெட்டு- 'ஷாக்' முடிவெடுத்த பொதுமக்கள்

 'Frequent power cut'- Lying down in the power board office itself and protesting

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கொந்தளித்த பொதுமக்கள் மின் வாரிய அலுவலகத்தின் முன்பே படுத்து உறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பலமுறை இதுகுறித்து மின்வாரியத்துக்கு தகவல் கொடுத்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இரவு நேரத்தில் மரக்காணம் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த அவர்கள், அங்குள்ள வளாகத்தின் ஒரு பகுதியில் படுத்து உறங்கி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த நூதன போராட்டம் நடைபெற்றது.

Advertisment
electicity police villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe