ஒரே நாளில் ஒரே நேரத்தில் இரண்டு உயிர்களைப் பறித்த கொடூரச் சம்பவம் விருதுநகர் மாவட்டம் தடங்கம் கிராமத்தில் நடந்துள்ளது.
சந்தனக்குமாருக்கும் அவரது நண்பர் மணிகண்டனுக்கும் பொத்தையன் மகன் மணிகண்டனுடன் முன்பகை ஏற்பட்டுள்ளது. இதுவே வாய்த்தகராறாகி, இரட்டைக் கொலையில் முடிந்திருக்கிறது. சந்தனக்குமாரையும் மணிகண்டனையும் கண்மாய்க்கரை அருகில், தன் நண்பர்களுடன் சேர்ந்து பொத்தையன் மகன் மணிகண்டன் வெட்டிக் கொன்றதாக, சந்தனக்குமாரின் தந்தை கண்ணன் வச்சக்காரப்பட்டி காவல்நிலையத்தில் புகாரளிக்க, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த டிஜிட்டல் காலத்திலும்கூட, கிராமங்களில் சாதாரண விஷயங்கள் பெரிய விவகாரமாக்கப்பட்டு, முன்பகையை மனதில் தேக்கி, அரிவாளால் வெட்டிக் கொலைகள் செய்வது, கொடுமையிலும் கொடுமையல்லவா?