Advertisment

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் எரித்துக் கொலை; சடலம் 3 மூட்டைகளில் கட்டி வாய்க்காலில் வீச்சு

f

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பீட்டர் (68) இவருக்கும், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஆவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த திருமுருகன் (29) என்பவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன்பிலிருந்து பழக்கம் இருந்துள்ளது. திருமுருகன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது பிரான்ஸ் நாட்டிலிருந்து சென்னை வந்த பீட்டருக்கும், திருமுருகனுக்கும் பீச்சில் முதல் முறையாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் கடந்த 3ம் தேதி பீட்டர் திருச்சிக்கு வந்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 5ம் தேதி திருமுருகனுக்கு பீட்டர் போன் செய்து உங்கள் ஊரை சுற்றிப் பார்க்க வரவேண்டும் எனக் கூறியுள்ளார். அதன்பேரில் திருச்சிக்கு வந்த திருமுருகன் ஒரு காரில் பீட்டரை அழைத்துக் கொண்டு மன்னார்குடிக்கு வந்துள்ளார். அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு ஆவிக்கோட்டையில் உள்ள திருமுருகன் வீட்டிற்கு வந்துள்ளனர். தொடர்ந்து வீட்டில் இருவரும் மது அருந்திக் கொண்டிருக்கும் போது இவர்கள் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் திருமுருகன் பீட்டரை கீழே தள்ளியுள்ளார். இதில் பீட்டர் மயங்கிய நிலைக்கு சென்று அங்கேயே இறந்துவிட்டார். உடனே திருமுருகன் தடயங்களை அழிப்பதற்காக அவரின் வீட்டில் வைத்து பீட்டரின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து எரிக்கப்பட்ட பீட்டரின் உடல் பாகங்களை 3 மூட்டைகளாக கட்டி மதுக்கூர் அருகே உள்ள வாட்டாகுடி உக்கடை வாய்க்காலில் வீசி எரிந்துள்ளார்.

Advertisment

சில நாட்களுக்கு பிறகு திருமுருகனே அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலரிடம் ஆஜராகி பீட்டரை கொன்று எரித்து 3 மூட்டைகளாக கட்டி ஆற்றில் வீசியதை கூறியுள்ளார். கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் மதுக்கூர் போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். பீட்டரிடம் இருந்த பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி தொடர்ந்து விசாரனை நடக்கிறது.

thajavur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe