Advertisment

சென்னையில் சரக்கு ரயில் தடம் புரண்டது!

A freight train derailed in Chennai

சென்னையில் சரக்கு ரயில் தடம் புரண்ட சம்பவம் பயணிகள் மத்தியிலும், ரயில்வே துறையினர் மத்தியிலும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை துறைமுகத்தில் சரக்குகளை இறக்கி விட்டு தண்டையார்பேட்டை யார்டுக்கு சரக்கு ரயில் ஒன்று இன்று (09.11.2024) மாலை 04:45 மணியளவில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் கடற்கரை ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது சரக்கு ரயிலின் வேகன்களில் உள்ள நான்கு சக்கரங்கள் தடம் புரண்டன. இதன் காரணமாக ஆவடி மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கமாகச் செல்லும் மின்சார பயணிகள் ரயில்கள் கால தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Advertisment

தடம் புரண்ட வேகன்களை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். காலி சரக்கு ரயிலில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Train Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe