style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக ஆட்சியில்தான் அதிக பத்திரிகை, ஊடகசுதந்திரமும், அனுமதியும்வழங்கப்பட்டது என்று கூறினார்.
அவர் பேசுகையில், கோவை நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, சாலையோரத்தில் இருந்தவர்களுக்கு 60 ஆண்டுகளாக பட்டா, வீடு இல்லாமல் இருந்தவர்களுக்கு கீரணத்தம், அறிவொளி நகர், வெள்ளலூர் பகுதிகளில் வீடு வழங்கப்பட்டுள்ளது.ஒரே குடும்பத்தில் பலபேர் உள்ளதால் அடுத்தக்கட்டமாக வழங்கப்படும். சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்தவர்கள் தகுதி உள்ளவர்களாக இருந்தால், அந்த 54 பேருக்கு மாற்று இடம் நிச்சயமாக வழங்கப்படும்.
பேரூர் அதிமுக பொதுக்கூட்டத்தில் ஊடகங்களின் கேமராக்கள் தாக்கப்பட்டதாக தகவல் வரவில்லை. இருப்பினும், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில்தான் அதிக ஊடக மற்றும் பத்திரிகை சுதந்திரம் அதிகம். நிறைய ஊடகங்களுக்கு அதிமுக அரசு அனுமதி அளித்துள்ளது. திமுக ஆட்சியில் தொலைக்காட்சிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்று தெரியும் எனக்கூறினார்.