''80 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச வாகன வசதி''-தேர்தல் ஆணையம் அறிவிப்பு  

 '' Free vehicle facility for those over 80 '' - Election Commission announcement

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கானபிரச்சாரம்நிறைவுபெற்றநிலையில் நாளை மறுநாள் வாக்குப்பதிவுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது தமிழகம்

இந்நிலையில் பல்வேறு அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.பரப்புரை முடிந்ததால் தொகுதியில் வாக்காளர்கள் இல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பரப்புரை முடிந்த தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்த கூடாது. சினிமா தியேட்டர் தொலைக்காட்சி சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரங்கள் வெளியிடக்கூடாது . சட்டமன்ற தொகுதிக்கு வெளியே இருந்து வரும் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், ஏப்ரல் 6 ஆம் தேதி என்று வாக்களிக்க 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச வாகன வசதியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இலவச வாகன வசதியை பெற விரும்புவோர் ஊபர் செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, கோவை ஆகிய மூன்று நகரங்களில் ஊபர் நிறுவனம் இலவச வாகன சேவை வழங்க உள்ளது.

tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe