






Published on 08/05/2021 | Edited on 08/05/2021
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் முதல் கையொப்பமாக முக்கியமான ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதில் ஒன்றான, பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டம் இன்று முதல் அனைத்து நகரங்களிலும் அமலுக்கு வந்தது. அதன்படி தமிழக அரசு அறிவித்துள்ள மாநகரப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்தின் மூலம் இன்று சென்னை கோயம்பேடு மற்றும் பிராட்வே பேருந்து நிலையங்களில் இலவசமாகப் பெண்கள் பலரும் பயணம் செய்தனர்.