இந்தியா முழுவதும் கரோனா வேகமாக பரவுவதால் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர வேறு எதுவும் கிடைக்காதபடி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
திருவண்ணாமலை நகரில் பொதுமக்கள் வெளியே வராதபடியும், மறைமுகமாக கடைகள் திறந்து வியாபாரம் செய்பவர்களை தடுக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக உள்ளனர்.
அதேபோல் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நகரம் முழுமைக்கும் சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக உள்ளனர். மக்களை பாதுகாக்கும் பணியில் சுகாதாரத்துறை, துப்புரவு பணியாளர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறையை சேர்ந்தவர்கள் நகரை வலம் வந்தபடியே உள்ளார்கள். தங்களுக்கு நோய் தொற்றும் என தெரிந்தே சுகாதார பணியில், பாதுகாப்பு பணியில் தீவிரம் காட்டி மக்களுக்காக உழைக்கும் இவர்களுக்கு கைதட்டலை விட சிறந்த பரிசு இதுதான் என திருவண்ணாமலை நகரத்தில் மத்தளாங்குளத்தெருவில் பெரியார் சிலை பின்புறம் டீ கடை வைத்துள்ள அக்பர் பாஷா என்பவர், அவர்களுக்கு இலவசமாக டீ வழங்கினார்.
ஊரடங்கு உத்தரவால் கடைகள் குறைவாக உள்ள நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை தறுமாறாக உயர்த்தி கொள்ளையடிக்கும் 95 சதவித வியாபாரிகளுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பு பணியில் உள்ளவர்களுக்கு இலவசமாக தேநீர் வழங்குபவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.