sellur raju

கிரைண்டர் மிக்சி இலவசமாக கொடுத்ததன் மூலம் குடும்பத்திலுள்ள மருமகள் மாமியார் சண்டையை போக்கியவர் ஜெயலலிதா என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

Advertisment

மதுரை மாவட்டம் திருப்பரங்குற்றத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், கிரைண்டர் மிக்சி இலாசவமாக கொடுத்ததன் மூலம்தமிழகத்தில் நிறைய குடும்பங்களில் நிலவி வந்த மாமியார் மருமகள் சண்டையை தீர்த்துவைத்தவர் ஜெயலலிதா. அவருக்கு குடும்பம் இல்லை என்றாலும் தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டினார்.