Advertisment

சென்னை அம்மா உணவகங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை இலவச உணவு... -முதல்வர் பழனிசாமி

ஸல,

Advertisment

மருத்துவக் குழுவினருடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் கரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் கலந்துரையாடினார்.

இந்நிலையில், பொதுமுடக்கம் குறித்து அறிவிப்புகள் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்து தமிழக அரசு நேற்று மாலை அறிவித்தது. அந்த உத்தரவில் பொது முடக்கத்தை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. பல்வேறு கட்டுப்பாடுகள்,தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு வரை பொது முடக்கம் நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 5ம் தேதி வரையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe