Advertisment

சிதம்பரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்!

Free eye treatment camp at Chidambaram!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், பாரதிய ஜெயின் சங்கட்டனா, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை தடுப்பு சங்கம் மற்றும் மிஷ்மரிமல் மஹாவீர் சந்த் டிரஸ்ட் ஆகியவை இணைந்து சிதம்பரம் விழல்கட்டி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஜெயின் பவனில் இன்று (21/11/2021) காலை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.

Advertisment

இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், ரோட்டரி சங்க தலைவர் சீனுவாசன், மஹாவீர் சந்த் டிரஸ்ட் தலைவர் கமல்கிஷோர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் தீபக்குமார், இந்தர், ஜினேந்தர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியில் கண் சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிகிச்சைப் பெற்றனர்.

Advertisment

Chidambaram Cuddalore eye camp
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe