Skip to main content

இலவச சைக்கிள் திட்ட டெண்டர் - ’ஹீரோ சைக்கிள்’ கோரிக்கை நிராகரிப்பு

Published on 24/03/2018 | Edited on 24/03/2018
cycle

 

இலவச சைக்கிள் திட்டத்திற்கான டெண்டர் விதிமுறைகளை தளர்த்த அரசுக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

தமிழகத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு அரசின் இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் 6 லட்சம் சைக்கிள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டது. இதற்கு விண்ணப்பித்த ஹீரோ சைக்கிள்ஸ் நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்படவில்லை என டெண்டர் நிராகரிக்கப்பட்டது.

 

சைக்கிளில் உள்ள மணி (பெல்) மற்றும் தமிழக அரசு முத்திரை இடம்பெறவில்லை என்ற காரணத்திற்காகவும் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

 

இதனை எதிர்த்து ஹீரோ சைக்கிள் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சிறிய அளவிளான நிபந்தனைகளிலிருந்து விளக்கு அளித்து டெண்டர் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, தொழில்நுட்ப தகுதி சிறியதாக இருந்தாலும் விலக்களிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க முடியாது என கூறி மனுவை  தள்ளுபடி செய்தனர். 

 

இதுபோன்று ஒரு நபருக்கு விலக்கு அளித்தால், ஒரு தரப்பு சார்பாக அமைந்துவிடும் எனவும் நீதிபதி விளக்கமளித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

கிளாம்பாக்கம் நடைமேம்பாலம்; டெண்டர் வெளியீடு

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Publication of tender on kilambakkam footbridge

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனப் பெயரிடப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) நேற்று (30-01-24) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. பயணிகளின் வசதிக்காக தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் போது விழுப்புரம் கோட்ட பேருந்துகள் மட்டும் தாம்பரம் வரை இயக்கப்படும். 

அதே சமயம் மீண்டும் தென்மாவட்டங்களுக்கு கிளம்பும் அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்படும் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது. மேலும் சென்னையில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாகவும், பூவிருந்தவல்லி வழியாக வேலூர், திருப்பத்தூர், ஓசூர் வரை செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகம் முழுவதும் செல்லும் அரசு பேருந்துகளுக்கான நடைமேடை எண்களை நேற்று (30-01-24) அறிவித்தன.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்க டெண்டர் வெளியிட்டுள்ளது. அதில், பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் மையப்பகுதிக்கு 400 கி.மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்படவுள்ளது. மேலும், நகரும் படிக்கட்டிகள் மற்றும் மின் தூக்கி வசதியுடன் இந்த நடைபாதை அமைக்கப்படவுள்ளது. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டெண்டருக்கு பிப்ரவரி 14ஆம் தேதி கடைசி நாள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. 

Next Story

 ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று தொடக்கம்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
New program be aunched today at Chief minister mk stalin instruction

மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் 'உங்களைத் தேடி - உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கப்பட உள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் அறிவித்தார். 

'உங்களைத் தேடி - உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது. 

அதன்படி, முதலமைச்சர் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’திட்டம் இன்று (31-01-24) அமலுக்கு வர உள்ளது. இன்று தொடங்கும் இந்த திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து நேரடியாக அங்கு சென்று 24 மணி நேரம் தங்கி மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண்பர். 

மேலும், இந்த திட்டத்தின்படி, ஆட்சியர்கள் இன்றைய தினம் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை அந்த கிராமத்தில் தங்கி இருந்து பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில் ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண உள்ளனர்.  மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.