/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cycle1.jpg)
இலவச சைக்கிள் திட்டத்திற்கான டெண்டர் விதிமுறைகளை தளர்த்த அரசுக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு அரசின் இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் 6 லட்சம் சைக்கிள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டது. இதற்கு விண்ணப்பித்த ஹீரோ சைக்கிள்ஸ் நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்படவில்லை என டெண்டர் நிராகரிக்கப்பட்டது.
சைக்கிளில் உள்ள மணி (பெல்) மற்றும் தமிழக அரசு முத்திரை இடம்பெறவில்லை என்ற காரணத்திற்காகவும் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஹீரோ சைக்கிள் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சிறிய அளவிளான நிபந்தனைகளிலிருந்து விளக்கு அளித்து டெண்டர் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, தொழில்நுட்ப தகுதி சிறியதாக இருந்தாலும் விலக்களிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதுபோன்று ஒரு நபருக்கு விலக்கு அளித்தால், ஒரு தரப்பு சார்பாக அமைந்துவிடும் எனவும் நீதிபதி விளக்கமளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)