சென்னை மாநகரப் பேருந்துகளில் முதியவர்கள் இலவசப் பயணம்: இன்று முதல் டோக்கன்

பரக

சென்னையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, முதியோர்களுக்கான இலவசப் பஸ் பாஸ் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னை மாநகரப் பேருந்துகளில் இன்று முதல் இலவசப் பஸ் பாஸ் பெறுவதற்கான டோக்கன்களை முதியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள் மற்றும் புதியதாகப் பெற விரும்புபவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 21 பணிமனைகள், 19 பேருந்து நிலையங்களில் இலவசப் பேருந்து பயண அட்டைகளை முதியவர்கள் பெற்றுக்கொள்ளலாம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் ஒன்றுக்கு பத்து வீதம், ஆறு மாதங்களுக்கு டோக்கன் வழங்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

bus pass senior citizen
இதையும் படியுங்கள்
Subscribe