Skip to main content

சென்னை மாநகரப் பேருந்துகளில் முதியவர்கள் இலவசப் பயணம்: இன்று முதல் டோக்கன்

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

பரக

 

சென்னையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, முதியோர்களுக்கான இலவசப் பஸ் பாஸ் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னை மாநகரப் பேருந்துகளில் இன்று முதல் இலவசப் பஸ் பாஸ் பெறுவதற்கான டோக்கன்களை முதியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஏற்கனவே அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள் மற்றும் புதியதாகப் பெற விரும்புபவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 21 பணிமனைகள், 19 பேருந்து நிலையங்களில் இலவசப் பேருந்து பயண அட்டைகளை முதியவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.  60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் ஒன்றுக்கு பத்து வீதம், ஆறு மாதங்களுக்கு டோக்கன் வழங்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதியவர் எரித்து கொலை? - உறவினர்கள் சாலை மறியல்

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

karur senior citizen incident relatives blocked road

 

கரூரில் முதியவர் எரித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த ராசா கவுண்டனூர் பகுதியில் கருப்பண்ணன்(வயது 72) என்ற முதியவர் உடல் எரிந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டார். நிலம் சம்பந்தமாக அண்ணன் கருப்பண்ணன், தம்பி காத்தவராயன் ஆகிய இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத் தென்னந்தோப்பில் எரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் 24 மணி நேரம் ஆகியும் குற்றவாளியைக் கைது செய்யவில்லை எனக் காவல்துறையைக் கண்டித்து காந்திகிராமம் பகுதியில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சுமார் அரை மணி நேரம் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உடலைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பாக வழக்குப் பதிவு செய்து, குற்றவாளி கைது செய்யப்படுவார் என்று தெரிவித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

 

 

Next Story

சென்னையில் நடைபெற்ற மணியோசை எழுப்பும் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (25.04.2023) காலை 10 மணியளவில் சென்னை ஈ.பி.எப். (E.P.F) பென்ஷனர்கள் சங்கம் சார்பில் மணியோசை எழுப்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசிடம் குறைந்தபட்ச பென்ஷனாக 9 ஆயிரம் ரூபாயை பஞ்சப்படியுடன் வழங்கக் கோரியும் மூத்த குடிமக்களுக்கு  வழங்கப்பட்டு வந்த ரயில்வே பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கக் கோரியும் கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.