
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக சுமார் ரூ.323 கோடி செலவில், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், விருத்தாசலம் ஆலடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் இரும்பு கடையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட இலவச சைக்கிள்கள் புத்தம் புதிதாக, ஸ்டிக்கர் கூட பிரிக்காமல் குவிந்து கிடந்தன. நீண்ட தூரத்திலிருந்து பள்ளிக்கு வரக்கூடிய ஏழை எளிய மாணவர்களுக்காக கொடுக்கப்பட்ட இலவச சைக்கிள்கள் இரும்பு கடைக்கு எவ்வாறு சென்றது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்ததும் கல்வித்துறையினரும், வருவாய்த்துறையினரும் அந்த சைக்கிள்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.