mk stalin

இலவச மிதிவண்டி திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Advertisment

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கிவைத்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டியை வழங்கினார். விழாவில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், அன்பில் மகேஷ், சேகர் பாபு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கல்வியாண்டில் இலவச மிதிவண்டி திட்டம் மூலம் 6.35 லட்ச மாணவ மாணவிகள் பயன்பெறுகின்றனர். இதற்காக தமிழக அரசு ரூ.323 கோடியே 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.