'Fraud using my name' - DIG Varunkumar warns

பெரம்பலூரில் சிஆர்பிஎப் வீரர் என சொல்லி மோசடி நிகழ்த்த முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisment

தன்னுடைய பெயரை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் பண மோசடியில் ஈடுபடுவதால் விழிப்புடன் இருக்க வேண்டும் என திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

பெரம்பலூரை சேர்ந்தஒருவரை வாட்ஸ்அப் செயலி மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் தான் ஒரு சிஆர்பிஎப் வீரர் என அறிமுகப்படுத்திக்கொண்டு தன்னிடம் இருக்கும் வீட்டு உபயோக பொருட்கள் குறைந்த விலையில் கொடுக்கிறேன் வாங்கிக்கொள்ளுங்கள் தெரிவித்துள்ளார். மேலும் தான் வருண்குமாரின் நண்பர்தான். அவர் தான் உங்கள் தொலைபேசிஎண்ணை கொடுத்தார் எனக் கூறி மோசடியில் ஈடுபட முயன்றுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய பெயரை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் பண மோசடியில் ஈடுபடுவதால் விழிப்புடன் இருக்க வேண்டும் என திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தெரிவித்துள்ளார். அந்த மோசடி நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisment