Advertisment

பிரிண்டிங் பிரஸ்களை குறிவைக்கும் மோசடி கும்பல் - எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்!

jkl

Advertisment

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் முனியசாமி என்பவர் ஆர்.எஸ் டிசைன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனத்திற்கு வருகை தந்த இரண்டு டிப்டாப் ஆசாமிகள் தாங்கள் சித்த வைத்திய சாலை சென்னையில் ஆரம்பித்துள்ளோம். எங்களுக்கு 25,000 விசிட்டிங் கார்டு தேவைப்படுகிறது எனக் கூறி அங்கு பணிபுரிந்த பெண்ணிடம் டிசைன் பார்க்க வேண்டும் என விசிட்டிங் கார்டு கேட்லாக் கேட்டுள்ளனர். அங்குப் பணி புரிந்த பெண் கேட்லாக்கை கொடுக்க மறுத்துள்ளார். அதற்கு அந்த ஆசாமிகளோ மேடம் கீழே காரில் உள்ளார். மேடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக காலில் அடிப்பட்டுவிட்டது. அதனால் அவரால் மேலே வர இயலவில்லை. நாங்கள் கேட்லாக்கை கொண்டு போய் காட்டிவிட்டு வருகின்றோம் என்று கூறியுள்ளார். அதற்கு அங்கு பணிபுரியும் பெண் கேட்லாக்கை கொடுக்க மறுத்து விட்டார். இதையடுத்து அங்கு பணிபுரிந்த பெண் மற்ற பணிகளில் கவனம் செலுத்த, அந்த ஆசாமிகள் அங்கிருந்த விசிட்டிங் கார்டு கேட்லாக்கை லாவகமாக எடுத்துச் சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்தில் ஒரு கேட்லாக்கை காணவில்லை என அங்கு பணிபுரியும் பெண் உரிமையாளரிடம் தெரிவிக்க,வந்தவர்கள் தான் எடுத்து விட்டு சென்றுவிட்டார் என்று அந்த பெண்மணி தெரிவிக்க, சந்தேகமடைந்த ஆர்.எஸ் டிசைன்ஸ் உரிமையாளர் முனியசாமி அருகில் உள்ள ஸ்டுடியோ மற்றும் ப்ரிண்டிங் செய்யும் இடங்களில் தேடிய போது சற்று தொலைவில் இருந்த சன்ரைஸ் ஸ்டுடியோவில் அதே இரண்டு ஆசாமிகள் தாங்கள் சென்னையில் சித்த வைத்தியசாலை வைத்துள்ளோம் அதற்கு 25000 விசிட்டிங் கார்டு அடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். சற்று நேரத்தில் அங்கு வந்த ஆஸ் எஸ் டிசைன் உரிமையாளர் முனியசாமி இப்பொழுது தான் எங்கள் அலுவலகத்தில் வந்து 25000 விசிட்டிங்கார்டு அடிக்க வேண்டும் என்று கூறி விசிட்டிங் கார்டு கேட்லாக்கை திருடிச்சென்றுவிட்டனர். இங்கு வந்து என்ன சொன்னார்கள் என்று கேட்க 25000 விசிட்டிங் கார்டு அடிக்க வேண்டும் என்றும் கேட்லாக் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்று சொல்ல இவர்கள் மீது சந்தேகமடைந்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாகத் தகவல் சொல்ல உடனே கீழக்கரை தனிப்பிரிவு காவலர் முருகனைத் தொடர்பு கொண்டு நடந்த விபரத்தைத் தெரிவிக்க அவர் இரண்டு காவலர்களை அனுப்பி அவர்களைக் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

jkl

Advertisment

நாம் இதுபற்றி காவல்துறையில் விசாரித்த போது சென்னை,நேரு காலனியைச் சேர்ந்த சரண் என்பதும்,மற்றொருவர் பெங்களுரை சேர்ந்த நாகேஷா என்பதும் தெரியவந்தது. இவர்களுடன் சித்தா துர்கா பகுதியைச் சேர்ந்த ஷில்பா என்பவரும் வந்துள்ளார்.இதில் ஷில்பா தப்பியோடிவிட்டார். இவர்கள் இந்த விசிட்டிங் கார்டுகளை பயன்படுத்தி அதில் உள்ள அலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு உங்களுக்கு லோன் தருகிறோம், வங்கியிலிருந்து பேசுகிறோம், உங்களுக்குப் பரிசுப் பொருட்கள் கிடைத்துள்ளது. ஏடிஎம் கார்டு ரினிவெல் செய்கின்றோம் என்று பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாக தெரிகிறது.மேலும் எங்களிடம் தங்கம் உள்ளது முதலில் குறைந்த அளவில் வாங்கி சென்று அந்த தங்கம் ஒரிஜினல் தானா என்று சோதனை செய்து பாருங்கள். பிறகு உங்களுக்குத் தேவை என்றால் தங்கத்தை பிஸ்கட்டுகளாக வைத்துள்ளோம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி தங்கம் வாங்க வரும் போது ஒரு நபர் மட்டுமே வரவேண்டும் எனக் கூறி அவர்கள் வைத்திருக்கும் பணம், செல்போன் போன்றவற்றைப் பறித்துக் கொண்டு அவர்களைக் கடுமையாகத் தாக்கி தப்பிச் சென்றுவிடுகின்றனர்.

இது போன்ற செயல்களுக்காக இது போன்ற விசிட்டிங் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இந்த விசிட்டிங் கார்டு கேட்லாக்கை எடுத்து கொடுத்தால் அவர்களுக்கு 20000 ரூபாய் கொடுத்துள்ளது அந்த மோசடி கும்பல். இவர்கள் கூலிக்கு வேலை செய்வது போல் உள்ளது என்றனர் காவல்துறையினர். இது போன்ற மோசடி கும்பல்களை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள் பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்கள்.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe