Advertisment

அமைச்சரின் உதவியாளர் மீது மோசடி புகார்..! 

Fraud complaint against minister's aide ..!

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நிலோஃபர் கபில். வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவான அவருக்கு நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை சீட் வழங்கவில்லை. இதற்கு காரணம் அமைச்சர் வீரமணிதான் என குற்றம்சாட்டிவிட்டு அமைதியாக ஒதுங்கிவிட்டார் நிலோஃபர் கபில்.

Advertisment

இந்நிலையில், அமைச்சர் நிலோஃபர் கபிலின் அரசியல் உதவியாளராக வலம் வரும் அதிமுக பிரமுகரும், முன்னாள் ந.செவுமான பிரகாசம், ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த லதா என்கிற பெண், தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். அந்தப் புகாரைப் பெற்ற போலீஸார், அதன்மீது சி.எஸ்.ஆர் கூட போடாமல் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அமைச்சரின் உதவியாளர் மீது ஒரு பெண் கைக்குழந்தையுடன் வந்து புகார் தந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

admk vaniyambadi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe