Advertisment

மோடியின் உதவியாளர் என்று கூறி மோசடி... சென்னையை சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் புகாரின் அடிப்படையில் விசாரணை!!

பிரதமரின் தனி உதவியாளர் என்று கூறி சென்னை கீழ்கட்டளையில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திவருபவரிடம்மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

சென்னை கீழ்கட்டளையில் கண்மதிகல்வி அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை சுரேஷ்பாபு என்பவர் கடந்த ஒரு வருடமாக நடத்தி வருகிறார். இவருக்கு ரவீந்திர பாபு என்பவர் மூலமாக பிரதமரின் தனி உதவியாளர் என்று கூறும் ஹூடாவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஹூடா தான் ஒருஐஏஎஸ் எனவும், வேலை காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கு அடிக்கடி சுற்றுப் பயணம் செய்வதாகவும் கூறி உள்ளார்.

Advertisment

Fraud claiming to be Modi's aide...Investigation based on the complaint of the Chennai-based NGO

பின்னர் வாட்ஸ்அப் மூலமாக ரிசர்வ் வங்கி தரப்பில் 2000 கோடி ரூபாய் அறக்கட்டளைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வங்கி அனுமதி சான்றிதழ் சுரேஷ்பாபுவுக்கு அவர் அனுப்பியுள்ளார். இதிலிருந்து தனது அறக்கட்டளைக்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கித்தருவதாக கூறநம்பிய சுரேஷ்பாபு அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் அளித்ததோடு கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் செலவும் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தி தர பணம் கேட்டபோது சுரேஷ்பாபுவிற்குசந்தேகம் ஏற்பட்டது. இதனால் விசாரணையில் இறங்கியபோது அந்த பெயரில்ஐஏஎஸ் அதிகாரி யாருமே இல்லை என தெரிய வந்தது. தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தசுரேஷ்பாபு இந்த மோசடி குறித்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

cheating Assistant Chennai fraud prime minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe