Advertisment

ஏற்கனவே திருமணமான பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்து மோசடி!

Fraud by keeping an already married woman married to someone else

நாமக்கல் அருகே ஏற்கனவே திருமணமான பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

Advertisment

நாமக்கல் மாவட்டம், கடந்தப்பட்டியைச் சேர்ந்த 35 வயதான விவசாயி ஜனகராஜ் என்பவர் தனக்கு திருமணத்திற்காக பெண் தேடுமாறு, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ராம்குமார் என்ற தரகரிடம் கேட்டார். இதற்காக ரூபாய் 1 லட்சம் கமிஷன் வாங்கிக் கொண்ட ராம்குமார், ராஜா என்ற மற்றொரு தரகரின் உதவியுடன் கோவில்பட்டியைச் சேர்ந்த கௌரி என்ற பெண்ணை கடந்த திங்கள்கிழமை அன்று மணம் முடித்து வைத்தார்.

Advertisment

திருமணத்தைப் பதிவு செய்ய கௌரியிடம் ரேஷன் கார்டை கேட்டு, அதனை வாங்கிப் பார்த்த போது, அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது ஜனகராஜுக்கு தெரிய வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த ஜனகராஜ், இது குறித்து புதுச்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, கௌரி, இடைத்தரகர்கள் ராஜா மற்றும் ராம்குமார் உள்ளிட்டோரிடம் புதுச்சத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன.

Husband and wife marriage police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe