அரசு சார்ந்த அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கிட வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisment

திருவாரூரில் தமிழக நாட்டுப்புற அனைத்து கலைஞர்கள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் திரைப்பட பிண்ணனி பாடகி சின்ன பொண்ணு தலைமையில் நடைபெற்றது.

Advertisment

MUSIC

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கூட்டத்தில் பேசியவர்கள் ஒவ்வொருவரும்," நாட்டுப்புற கலைகள் சமீப காலமாக அழிந்து வருகிறது. அரசு நாட்டுபுறகலைகளை காப்பாற்ற நலிந்த கலைஞர்களுக்கு அரசின் நலத்திட்டங்களும், அரசு சார்ந்த அனைத்து உதவிகளையும் வழங்கி ஊக்குவிக்கவேண்டும்.

Advertisment

தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாக்களில் நாட்டுபுற கலைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் வாய்ப்பு அளித்து கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவ வேண்டும்" என பலரும் வலியுறுத்தி பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் ராசி.மணிவாசகன், பொருளாளர் ஒரத்தநாடு கோபு, திரைப்பட நடிகர் ஜெயபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.