
அண்மையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி சென்னை ஐஐடியில்மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மற்றொரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பே சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் எம்.எஸ். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீவன்விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் ஸ்ரீ சாய் என்ற மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஐஐடி வளாகத்தில் இரண்டாம் ஆண்டு பி.டெக் படித்து வந்த கேதார் சுரேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவர் கேதார் சுரேஷ் தற்கொலை பற்றி கோட்டூர்புரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடலானது மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்தில் சென்னை ஐஐடி வளாகத்தில் நிகழ்ந்த நான்காவது தற்கொலை சம்பவம் இது என்பதால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)