Advertisment

மீனவர்கள், படகுகளை விடுவிக்கக் கோரி நான்காவது நாளாக போராட்டம்!

Fishermen for fourth day demanding release of boats

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 68 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் நான்காவது நாளாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 68 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், 10 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

Advertisment

அவர்களை விடுதலைசெய்ய வலியுறுத்தி 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். ராமேஸ்வரத்தில் நான்காவது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களின் வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில் ஒருநாளைக்கு ரூபாய் 10 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

boats fishermens navy Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe