தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காணாமல் போன நிலையில்நான்கு நாட்களுக்குப் பிறகு சிறுவன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு உடல்மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ZZ14.jpg)
தேனி மாவட்டம் கோம்பை அடுத்த உத்தமபாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி கீதா. இருவருக்கும் திருமண வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் ஹரிஷ் என்ற மகன் இருக்கிறான். கீதாவின் பெற்றோர் வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்தான் ஹரிஷ். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ஹரிஷ் வீடு திரும்பாததால் கீதாவின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் மகனை தேடி பார்த்துவிட்டு கடைசியில் கிடைக்கவில்லை என்பதனால் தேனி மாவட்டம் கோம்பை காவல்துறையில்புகார் அளித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ZZ13.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ZZ15.jpg)
இந்தநிலையில் அந்த ஊரில் உள்ள மயானம் அருகே அந்த நான்கு வயது சிறுவன் ஹரீஷ்முகத்தில் கற்களால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர். நான்கு வயது சிறுவன்கல்லால்அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அங்குபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us