Four trespassers at Kattupalli Adani port

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்திற்குள் கடல் மார்க்கமாக விசைப்படகில் 4 பேர் ஊடுருவ முயன்றனர். இதனைத் தொடர்ந்து, ஊடுருவி நுழைய முயன்ற நான்கு பேரையும் ரோந்து பணியில் இருந்த கடலோர காவல் படை உதவி ஆய்வாளர் சபாபதி தலைமையிலான அதிகாரிகள் விரட்டிச் சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை காசிமேடு பகுதியில் இருந்து அந்த விசைப்படகு வந்ததும், பிடிபட்ட நான்கு பேர் அதே பகுதியைச் சேர்ந்த தீபு ஜார்ஜ், பிரசாத், சந்தோஷ், அஜய் என்பதும், மீன்பிடி விசைப்படகில் இவர்கள் எதற்காக அதானி துறைமுக கடல் வளாகத்திற்குள் நுழைந்தனர் என்பது குறித்தும் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தினர்.

இந்த தகவல் தீயாக பரவிய நிலையில், கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.