/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cop_79.jpg)
திருச்சி மாவட்டம், மணிகண்டம் நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அழகிரி. இவரது மனைவி சின்ன அக்கா. இவர், இன்று ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து மணிகண்டம் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். மேலும், சங்கிலி பறிப்பு நடந்த இடத்திலிருந்த கடையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவையும் ஆய்வு செய்தனர். அதில் அந்த நபர்களின் முகங்கள் பதிவாகியிருந்தன. அதனைக் கொண்டு அந்த நான்கு பேரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைதான நால்வரும், கவுத்த நாயக்கன்பட்டி சேர்ந்த பாஸ்கர், நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்த வீரமணி, பாண்டியன், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. கைதான 4 பேரை மணிகண்டம் காவல்துறையினர் மேல்விசாரணை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)