திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரைச் சேர்ந்தவர் காஜா மொய்தீன். இவரது மகன் நாகூர் என்கிற நாகூர் மீரான் (வயது 29)இ.பி.ரோடு அந்தோணியார் கோவில் தெரு ஆர்ச் அருகே தனது சகோதரி தாஜ் நிஷாவுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த திருச்சி பட்டவர்த் ரோடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல், விருமாண்டி, அரசு, பாலா ஆகிய நான்கு பேரும் நாகூர் மீரானை கடத்திச் சென்றனர். இதுகுறித்து நாகூர் மீரானின் சகோதரி தாஜ் நிஷா கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகூர் மீரானை கடத்திச் சென்ற 4 பேரையும் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் வாலிபர் கடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப் பகலில் துணிகரம்; சகோதரியுடன் இருந்த வாலிபரைக் கடத்திய கும்பல்
Advertisment