
சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள மூவரசம்பேட்டையில் உள்ள குளத்தில் மூழ்கி நான்கு பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பழவந்தாங்கல் கங்கை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. சாமிஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அருகில் உள்ள மூவரசம்பேட்டையில் உள்ள குளத்தில் சாமி பல்லாக்கை கரையோரம் வைத்துவிட்டு குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
10 பேர் குளிக்க முற்பட்ட நிலையில் 5 பேர் குளத்தில் மூழ்கினர். ஐந்து பேர் மட்டுமே கரைக்கு வந்தனர். நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்ற நிலையில் தற்போது முதல் கட்டமாக 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். பழவந்தாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதோடு உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மீதமுள்ள ஒருவரின் உடலைத்தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சாமி ஊர்வலத்தின் போது நிகழ்ந்த இந்தசம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)