Published on 01/06/2021 | Edited on 01/06/2021

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு முன்பாக உள்ள நாலுகால் மண்டபம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றுவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம், மே 30ஆம் தேதிக்குள் கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இன்றுவரை (01.06.2021) கடைகள் அகற்றப்படாததால் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகமே முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தி, நாலுகால் மண்டபத்திற்கு இரும்பு கிரில் கம்பிகளைவைத்து பூட்டி சீல் வைத்துள்ளனர். 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாலுகால் மண்டபம் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் புதுப்பொலிவுடன் காணப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.